search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி புறப்பாடு"

    ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். #BJP #AmitShah
    சென்னை:

    பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார்.

    சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர்.

    தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர். எதிர்ப்பாளர்களே..! தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள் என ஆவேசமாக பேசினார்.

    பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பின்னர் அமித் ஷா சென்னை விமான நிலையம் சென்றடைந்தார், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah
    ×